2010-09-13 16:28:38

ஐரோப்பா வாழ் சீனக் கத்தோலிக்கர்கள் குறித்த கருத்தரங்கு ஜெர்மனியில் நடக்க விருக்கிறது


செப்.13, 2010. ஐரோப்பாவில் வாழ்ந்து வரும் சீனக் கத்தோலிக்கர்கள் குறித்த உயர் மட்ட அளவிலான கருத்தரங்கு ஒன்று ஜெர்மனியில் நடக்க விருக்கிறது.

ஐரோப்பிய போக்குகளும், கத்தோலிக்க பார்வையும் என்ற கருத்தில் ஜெர்மனியில் செப்டம்பர் 16 முதல் 19 வரை நடைபெற விருக்கும் கருத்தரங்கில் ஐரோப்பாவில் உள்ள சீனர்கள், முக்கியமாக அங்கு வாழும் கத்தோலிக்கர்கள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற உள்ளன.

சீன கத்தோலிக்கர்கள் பங்கு தளங்களிலும், ஐரோப்பிய கல்வி நிறுவனங்களிலும் முற்றிலும் இணைக்கப்பட வேண்டிய வழிகளும், ஐரோப்பா, சீனா ஆகிய நாடுகளிடையே மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகளும் இக்கருத்தரங்கில் பேசப்படும் என்று தெரிகிறது.

ஹாங்காங் முன்னாள் ஆயர் கர்தினால் Zen Ze-kiun, Munich பேராயர் Reinhard Marx ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்வர் என்றும் ஐரோப்பிய சீன ஒருங்கிணைப்பின் எட்டாவது கூட்டம் இது என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.