2010-09-11 16:23:22

மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு திருத்தந்தையும் Kentucky ஆயர்களும் அழைப்பு


செப்.11,2010. அமெரிக்க ஐக்கிய நாட்டு Kentucky ல் இம்மாதம் 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கும் கிரகரி வில்சன் என்பவரின் தண்டனையை மாற்றுமாறு திருத்தந்தையும் Kentucky ஆயர்களும் அம்மாநில ஆளுனர் Steve Beshear ஐக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் பியத்ரோ சாம்பி, திருத்தந்தையின் பெயரில் இவ்விண்ணப்பத்தைக் முன்வைத்துள்ளார்.

Louisville பேராயர் Joseph Kurtzம், Kentucky கிறிஸ்தவ சபைகள் அவை இயக்குனர் Marian McClure Taylorம் இணைந்து ஆளுனர் Beshearஐச் சந்தித்து வில்சனின் மரணதண்டனையை எதிர்ப்பதற்குத் தங்களுக்கு இருக்கும் சட்டப்பூர்வமான மற்றும் அறநெறி சார்ந்த கடமைகளை எடுத்துக் கூறினர்.

53 வயதாகும் வில்சன், கடத்தல், பாலியல் வன்செயல், திருட்டு, கொலை ஆகியவை தொடர்பாக 1988ல் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.