2010-09-11 16:26:55

பெல்ஜியப் பேராயர் இல்லத்தில் காவல்துறை நடத்திய திடீர் சோதனை சட்டத்துக்கு முரணானது


செப்.11,2010. பெல்ஜிய நாட்டின் பிரசல்ஸ் பேராயர் இல்லத்தில் அந்நாட்டு காவல்துறை நடத்திய திடீர் சோதனை சட்டத்துக்கு முரணானது மற்றும் அச்சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

பிரசல்ஸ் பேராயர் இல்லத்தில் கடந்த ஜூன் 24ம் தேதியன்று பெல்ஜிய ஆயர்கள் மாதாந்திரக் கூட்டத்தை நடத்திய போது அவ்வில்லத்தில் காவல்துறை திடீர் சோதனை நடத்தியது. அச்சமயம் ஆயர்களை ஒன்பது மணிநேரம் வெளியே போகவிடாமல் வைத்து, அலுவலகங்கள் மற்றும் Mechelen பேராலயத்தில் சோதனை நடத்தியது. இதில் சுமார் 500 இரகசிய ஆவணங்களையும் எடுத்துக் கொண்டது.

அச்சோதனையின் போது பேராலயத்திருக்கும் இரண்டு கல்லறைகளில் துளைகள் போட்டு காமிராக்களைச் செலுத்தி ஆவணங்களைத் தேடியது காவல்துறை.

காவல்துறையின் இந்நடவடிக்கை சட்டத்துக்கு முரணானது என்று இவ்வியாழனன்று முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.