2010-09-10 15:59:27

சர்வதேச அளவிலான பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் சேர்ந்து உழைக்குமாறு ஐ.நா. அழைப்பு


செப்.10,2010. உலகளாவிய அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மிகக் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருக்கும் சர்வதேச அளவிலான பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் சேர்ந்து உழைக்குமாறு ஐ.நா.பொது அவை அழைப்பு விடுத்துள்ளது.

சர்வதேச அளவிலான பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான யுக்திகள் என்ற தலைப்பில் ஆண்டுக் கூட்டத்தை முடித்துள்ள ஐ.நா.பொது அவை, இந்த யுக்திகளை நடைமுறைபடுத்துவதில் உறுப்பு நாடுகளுக்கு இருக்கும் முக்கிய பொறுப்பைச் சுட்டிக் காட்டியுள்ளது.

அத்துடன், அந்தந்தப் பகுதிகளிலுள்ள நிறுவனங்களும் குடிமக்கள் சமுதாயமும் இதில் ஈடுபாடு காட்டுமாறும் இது குறித்த உரையாடலில் ஈடுபடுமாறும் ஐ.நா.பொது அவை கேட்டுக் கொண்டுள்ளது.

ஐ.நாவின் உறுப்பு நாடுகள் இந்த யுக்திகளை நடைமுறைபடுத்தும் விதம் குறித்த அறிக்கையை 2012ம் ஆண்டின் ஐ.நா.வின் 66வது பொது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் இக்கூட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.