2010-09-10 15:58:25

2011 இல் இந்தியாவில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு


செப்.10,2010. இந்தியாவில் 1931ம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக சாதியின் அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு இந்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி இந்தியாவின் சுமார் 120 கோடி மக்கள் குறித்த சாதிவாரியான கணக்கெடுப்பு 2011ம் ஆண்டில் நடத்தப்படும் என்று இந்திய அமைச்சரவை அறிவித்துள்ளது.

அதேசமயம், நாட்டில் கடந்த ஏப்ரலில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்த பின்னர் அடுத்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை இந்தச் சாதிவாரியான கணக்கெடுப்பு நடை பெறும் என்றும் அவ்வவை அறிவித்துள்ளது.

இந்தியாவில் 1872ம் ஆண்டு முதல், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, பாலினம், மதம், தொழில், கல்வி உள்ளிட்ட விவரங்களைக் கொண்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. பின்னர் இது 1931ம் ஆண்டுக்குப் பிறகு கைவிடப்பட்டது.

1931ஆம் ஆண்டுதான் கடைசியாக இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

எனவே 2011 ஆம் ஆண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பு சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுவதாகும். இதற்குத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். இதற்கு 65 கோடி முதல் 85 கோடி டாலர் வரை தேவைப்படும் என்றும் கூறினார்







All the contents on this site are copyrighted ©.