2010-09-09 15:19:17

கவுத்தமாலா நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காரித்தாஸ் அமைப்பு முழு வீச்சில் உதவிகள்


செப்.09, 2010 மத்திய அமெரிக்காவின் கவுத்தமாலாவில் இச்செவ்வாயன்று பெய்த பெரு மழையாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அந்நாட்டின் காரித்தாஸ் அமைப்பு முழு வீச்சில் உதவிகள் செய்து வருகிறது.
கடந்த 50 ஆண்டுகள் இல்லாத அளவு பெய்துள்ள இந்த பெரு மழையால், நிலச்சரிவு ஏற்பட்டு, 40 பேர் இறந்துள்ளனர், மற்றும் 14000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
ஏற்கனவே இந்த ஆண்டின் துவக்கத்தில் அந்நாட்டில் வீசிய ஆகத்தா (Agatha) என்ற புயலால் அந்நாட்டில் பெருமளவு நிலப்பரப்பு மழையில் ஊறியிருந்ததால், இந்த மழையில் நிலச்சரிவு பெருமளவு உண்டானதென்று San Marcos மறைமாவட்டத்தின் சமூகப் பணியாளர் Susana Lopez கூறினார்.
இந்த மழையால் மெக்சிகோ நாட்டில் 600,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அப்பகுதிகளில் உழைத்து வரும் செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.மேலும் மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளதால், இந்த மழை, வெள்ளம் ஆகியவை 2007ம் ஆண்டு ஏறக்குறைய 10 லட்சம் மக்களைப் பாதித்த மழை வெள்ளத்தையும் விட அதிகமாக இருக்கும் என்றும், மேலும் மழையினால் அழிவுகள் ஏற்படாமல் இறைவன் தங்களைக் காக்க அனைவரும் வேண்டி வருவதாகவும் Tabasco மறைமாவட்டத்தின் சார்பில் பேசிய அருள்தந்தை Denis Ochoa Vidal கூறினார்.







All the contents on this site are copyrighted ©.