புனித தொன் போஸ்கோவின் திருப்பண்டங்கள் அமெரிக்கா, கனடாவில் பயணம்
செப்.08, 2010 புனித தொன் போஸ்கோவின் திருப்பண்டங்கள், இச்சனிக்கிழமை அமெரிக்க ஐக்கிய
நாட்டின் San Francisco நகரை அடைந்து, அங்கிருந்து அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் பல்வேறு
நகரங்களில் பயணம் மேற்கொள்ளும். 2015ம் ஆண்டு நிகழவிருக்கும் புனித தொன் போஸ்கோவின்
200வது பிறந்த விழாவையொட்டி, 2009ம் ஆண்டு, சனவரி 31ம் தேதி இத்தாலியின் தூரின் நகரில்
ஆரம்பமான இந்தப் பயணம், இது வரை தென் அமெரிக்காவின் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச்
சனிக்கிழமை San Franciscoவில் ஆரம்பமாகும் இந்தப் பயணம், அமெரிக்காவின் பல்வேறு நகரங்கள்
வழியாக, கனடாவின் Toronto நகரை அக்டோபர் 5ம் தேதி அடையும் என்று செய்திக் குறிப்பொன்று
கூறுகிறது.இத்திருப்பண்டங்கள் உலகின் 130 நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும்,
அமேரிக்கா, கனடா பயணங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய இணைய தளம் ஒன்று "நம்மிடையே தொன்
போஸ்கோ" என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.