2010-09-08 15:58:41

பல்சமயத் தலைவர்களின் சார்பில் நியூயார்க் உயர்மறைமாவட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை


செப்.08, 2010 நியூயார்க்கில் உள்ள பல்சமயத் தலைவர்கள் குழுவின் சார்பில், நியூயார்க் கத்தோலிக்க உயர்மறைமாவட்டம் இச்செவ்வாயன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி விமானங்களால் தாக்கப்பட்டு அழிந்து போன நியூயார்க் வர்த்தகக் கோபுரங்கள் இருந்த இடத்திற்கருகே ஓர் இஸ்லாமியத் தொழுகைக் கூடம் கட்டப்படும் திட்டம் நியூயார்க்கில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வரும் வேளையில், நியூயார்க் கத்தோலிக்க உயர்மறைமாவட்டம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நியூயார்க் எப்போதும் பல கலாச்சாரங்களையும், மதங்களையும் ஏற்று வந்துள்ள ஒரு பெருமைக்குரிய நகரம் என்று கூறும் இவ்வறிக்கை, நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்ற மனப்பான்மையை வளர்ப்பதே நமக்கு நன்மை பயக்கும் என்பதை வலியுறுத்தியுள்ளது.மதங்களுக்கிடையே நல்லுறவையும், உரையாடலையும் வளர்க்க தலைவர்களாகிய நாங்கள் அனைவரும் பாடுபடுவோம் என்று உறுதியளிக்கும் இந்த அறிக்கையில், நியூயார்க் பேராயர் Timothy Dolan, ப்ரூக்ளின் ஆயர் Nicholas DiMarzio ஆகிய இரு ஆயர்கள் உட்பட பல யூதமத குருக்களும், இஸ்லாமிய குருக்களும் கையொப்பமிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.