2010-09-08 15:57:47

குரானை எரிப்பதாக அறிவித்துள்ள திட்டத்திற்கு கத்தோலிக்க மற்றும் உலகத் தலைவர்கள் வன்மையான கண்டனம்


செப்.08, 2010 இம்மாதம் 11ம் தேதி குரானை எரிப்பதாக அறிவித்துள்ள ஒரு குழுவின் திட்டத்தை உலகின் பல நாடுகளின் கத்தோலிக்க ஆயர்கள், தலைவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் அனைவரும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள Dove World Outreach மையத்தைச் சேர்ந்த Terry Jones என்பவர் செப்டம்பர் 11ம் தேதி, வருகிற சனிக்கிழமையை, குரான் எரிக்கும் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று விடுத்த அழைப்பிற்கு, அமெரிக்காவிலிருந்தும் பல வேறு நாடுகளிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இச்செவ்வாயன்று வாஷிங்கடனில் பல்வேறு சமயத் தலைவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அவசரக் கூட்டம் ஒன்றின் இறுதியில், செய்தியாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஓர் அறிக்கையில், பல சமயங்களையும், கலாச்சாரங்களையும் சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொண்டுள்ள அமெரிக்காவில், வன்முறையைத் தூண்டும் இது போன்ற ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் களங்கத்தை விளைவிக்கிறது என்று கூறியுள்ளனர்.குரான் எரிக்கும் திட்டத்தை வன்மையாகக் கண்டித்து மும்பை பேராயர் கர்தினால் Oswald Gracias, லாகூர் பேராயர் Lawrence Saldhana, இந்தோனேசிய ஆயர் பேரவையின் செயலர் ஆயர் Johannes Pujasumarta ஆகியோர் கடந்த சில நாட்கள் கருத்துக்களைக் கூறி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.