2010-09-07 15:38:53

பிலிப்பைன்ஸ், ஹாங்காங் ஆயர்கள் தோழமையுணர்வுக்கு வேண்டுகோள்


செப்.07,2010. பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் எட்டு ஹாங்காங் சுற்றுலாப் பயணிகள் அண்மையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இவ்விரு அரசுகளுக்கிடையே உருவாகியுள்ள கசப்புணர்வுகள் அகற்றப்படுமாறு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மனிலாவில் அண்மையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ரொலாண்டோ மென்டோசா என்ற காவல்துறை அதிகாரி, மூன்று பிலிப்பைன்ஸ் நாட்டவர் உட்பட 22 ஹாங்காங் சுற்றுலாப் பயணிகள் இருந்த பேருந்தை கடத்தினார். 12 மணிநேரம் இடம் பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இடம் பெற்ற மீட்புப் பணியில் மென்டோசாவும் எட்டு ஹாங்காங் சுற்றுலாப் பயணிகளும் இறந்தனர். இது குறித்து செய்தி வெளியிட்ட ஹாங்காங் ஊடகங்கள் பிலிப்பைன்ஸ் அரசின் திறமையின்மையைக் குறைகூறின.

இவ்விவகாரம் தொடர்பாகப் பிலிப்பைன்சுக்கும் ஹாங்காங்கிற்கும் இடையே உருவாகியுள்ள பதட்டநிலைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு மன்னிப்பும் தோழமையுணர்வும் ஏற்படுமாறு இரு பகுதிகளின் ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்







All the contents on this site are copyrighted ©.