2010-09-07 15:44:01

பிரிட்டனில் அணுஆயுதப் பரிசோதனைக் கட்டிடம் கட்டுவதற்கானத் திட்டத்திற்கு கிறிஸ்தவ அமைதி ஆர்வலர்கள் எதிர்ப்பு


செப்.07,2010. பிரிட்டனில் AWE என்ற அணு ஆயுதத் தொழிலகம் அமைந்துள்ள இடத்தில் பல கோடிப் பவுண்டுகள் செலவில் ஆயுதப் பரிசோதனை வசதிகள் கொண்ட கட்டிடம் கட்டுவதற்கானத் திட்டத்தை எதிர்த்து கிறிஸ்தவ அமைதி ஆர்வலர்கள் உட்பட பலர் போராட்டம் மேற்கொண்டனர்.

இந்த இடத்தில் நூறு கோடி பவுண்டு பணத்தில் நவீனப்படுத்தப்படவிருக்கும் இத்திட்டம் குறித்துக் குறைகூறும் இந்த ஆர்வலர்கள், அணுப்பரவல் தடை ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதற்கானப் பிரிட்டனின் அர்ப்பணத்தை இது ஊக்கமிழக்கச் செய்யும் என்று குறை கூறுகின்றனர்.

இந்தத் தொழிலகத்தின் வேலியை அறுத்து உள்ளே நுழைந்து முழந்தாள்படியிட்டுச் செபித்த 43 வயது Passionist துறவு சபை அருள்தந்தை Martin Newell ம், இன்னும் சில கத்தோலிக்கப் பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.