2010-09-07 15:42:12

நேபாளப் பாலியல் வியாபாரத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - காரித்தாஸ்


செப்.07,2010. நேபாளத்தில் பாலியல் வியாபாரம் மற்றும் அடிமைத் தொழில் செய்வதற்காக அதிகரித்து வரும் மனித வியாபாரங்கள் பெண்களையும் சிறாரையும் மட்டுமன்றி ஆண்களையும் பாதித்து வருகின்றது என்று நேபாள காரித்தாஸ் எச்சரித்தது.

காத்மண்ட் விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் இவ்வாரத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் சுமார் நூறு கத்தோலிக்க இளைஞரிடம் இதனை அறிவித்தது காரித்தாஸ்.

செப்டம்பர் 5ம் தேதி நேபாளத்தில் கடைபிடிக்கப்பட்ட மனித வியாபாரத்திற்கெதிரான தேசிய நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு கூட்டத்தில், 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான நேபாளப் பெண்களும் சிறுமிகளும் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவுக்கு வியாபாரம் செய்யப்படுகின்றனர் என்று கூறப்பட்டது.

ஏறத்தாழ இரண்டு இலட்சம் நேபாளச் சிறார் பிற நாடுகளுக்கு வியாபாரம் செய்யப்படுகின்றனர் என்று கூறிய நேபாள காரித்தாஸ் பெண்கள் பிரிவுத் தலைவர் ரூபா ராய், காத்மண்டுக்குள்ளேயே சுமார் இருபதாயிரம் சிறுமிகள் பாலியல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.








All the contents on this site are copyrighted ©.