2010-09-07 15:45:52

ஈரானில் கல்லால் எறிந்து கொல்லப்படவிருக்கும் பெண் விவகாரத்தில் அரசு உறுதி


செப்.07,2010. ஈரானில் கல்லால் எறிந்து கொல்லப்படத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் Sakineh Mohammdi Ashtiani விவகாரத்தில் வெளிநாட்டுச் சக்திகள் தலையிடுவது நிறுத்தப்படுமாறு ஈரான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

ஆஸ்தியானியின் விவகாரம் மனித உரிமை விவகாரமாக மாறக்கூடாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் கூறினார்.

கொலை மற்றும் விபச்சாரம் தொடர்புடைய வழக்கில் சிறையிலுள்ள ஒரு பெண்ணுக்காகப் பரிந்துரை செய்வது துரதிஷ்டவசமானது என்று பேச்சாளர் Ramin Mehmanparast கூறினார்.

ஆஸ்தியானி கல்லால் எறிந்து கொல்லப்படும் தீர்ப்பில் அரசு உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஆஸ்தியானியின் குடும்பத்தினர் அவரைச் சந்திப்பதற்கு கடந்த இரண்டு வாரங்களாக அனுமதிக்கப்படவில்லை என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது







All the contents on this site are copyrighted ©.