2010-09-06 15:44:53

பாலியல் தொடர்பான வியாபாரம் நவீனகால அடிமைத்தனம் - பிரிட்டன் ஆங்லிக்கன் பேராயர்


செப்.06,2010. பாலியல் தொடர்பான வியாபாரம் நவீனகால அடிமைத்தனம் என்று கூறிய அதேவேளை, இதில் பெண்கள் மற்றவர்களின் பொருளாதாரப் பேராசைக்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டு மாண்பை இழக்கின்றனர் என்று பிரிட்டன் ஆங்லிக்கன் பேராயர் John Sentamu கூறினார்.
EU என்ற ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளில் பெரும் பிரச்சனையாக இருக்கும் இவ்விவகாரம் குறித்துப் பேசிய யார்க் ஆங்லிக்கன் பேராயர் John Sentamu, EU நாடுகளிலும் நாடுகளுக்குள்ளும் ஆண்டுதோறும் இடம் பெறும் நூறாயிரக்கணக்கான மனித வியாபாரங்கள் கவலை தருவதாக இருக்கின்றன என்றார்.
பெரும்பாலான மக்கள் பல்கேரியா, ரொமானியா ஆகிய நாடுகள் வழியாக வியாபாரம் செய்யப்படுகின்றனர் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.சர்வதேச தொழில் நிறுவனத்தின் கூற்றுப்படி மனித வியாபாரத்தின் விளைவாக உலகில் குறைந்தது 2 கோடியே 45 இலட்சம் பேர் கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு வியாபாரம் செய்யப்படுவோரில் 43 விழுக்காட்டினர் பாலியல் வியாபாரம் தொடர்புடையவர்கள். இவர்களில் 98 விழுக்காட்டினர் பெண்களும் சிறுமிகளும் என்று பேராயர் ஜான் குறிப்பிட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.