இந்தியத் திருச்சபையின் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அதிக முயற்சிகள் தேவைப்படுகின்றன
– கல்வியாளர்கள்
செப்.06,2010. இந்திய ஆயர்கள் மூன்றாண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட ஏழைகளுக்கு ஆதரவான
கல்வித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அதிக முயற்சிகள் தேவைப்படுகின்றன என்று திருச்சபையின்
கல்வியாளர்கள் கூறுகின்றனர். ஹைதராபாத்தில் அண்மையில் இடம் பெற்ற கூட்டத்தில் இந்தியாவின்
எல்லாப் பகுதிகளிலிருந்து 36 பிரதிநிதிகள் பங்கு கொண்டு இந்திய ஆயர்கள் 2007ம் ஆண்டு
வெளியிட்ட அனைத்திந்திய கத்தோலிக்க கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து மதிப்பீடு
செய்தனர். இக்கூட்டத்தில் பேசிய இப்பிரதிநிதிகள், வசதிகள் இல்லை என்று காரணத்தால்
எந்தவொரு கத்தோலிக்கக் குழந்தைக்கும் கல்வி வசதி மறுக்கப்படக் கூடாது என்று வலியுறுத்தினர்.இந்திய
கத்தோலிக்கத் திருச்சபை நாடெங்கும் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒரு
கோடிக்கு அதிகமான மாணவர்க்குச் சேவையாற்றுகின்றது. இந்நிறுவனங்களில் ஏறக்குறைய 59 விழுக்காடு
கிராமங்களில் இருக்கின்றன.