2010-09-04 14:36:47

மொசாம்பிக் நாட்டிற்காகச் செபிக்குமாறு அந்நாட்டுப் பேராயர் அழைப்பு


செப்.04,2010. ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் இரண்டு நாட்களாக இடம்பெற்ற கலவரத்தைத் தொடர்ந்து அமைதி திரும்பியுள்ள வேளை மக்கள் நாட்டிற்காகச் செபிக்குமாறு ஊக்கப்படுத்தியுள்ளார் அந்நாட்டுப் பேராயர் ப்ரான்சிஸ்கோ கிமோயோ.

மொசாம்பிக் தலைநகர் மப்புட்டோவில் இடம் பெற்ற வாகன வேலை நிறுத்தங்களைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக இடம் பெற்ற மோதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்று அந்நகர் பேராயர் கிமோயோ கூறினார்.

ரொட்டியில் 30 விழுக்காடு விலை உயர்வு, இதேபோல் மின்சாரம், தண்ணீர் விலைகளும் அதிகரிக்கும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்மோதல்கள் இப்புதனன்று மிகவும் கடுமையாக இருந்தது என்றார் மப்புட்டோ பேராயர்.

இப்போராட்டத்தில் 7 பேர் இறந்தனர். 288 பேர் காயமடைந்தனர். 23 கடைகள் சூறையாடப்பட்டன மற்றும் 2 இரயில்களும் 12 பேருந்துகளும் சேதமடைந்தன







All the contents on this site are copyrighted ©.