2010-09-04 14:35:57

சிலே சுரங்க விபத்தில் சிக்கியுள்ள பணியாளர்களுக்கு திருத்தந்தை ஆசீர்வதித்த செபமாலைகள்


செப்.04,2010. சிலே நாட்டின் வடபகுதி பாலைநிலத்தில் சுரங்கத்தின்கீழ் சுமார் ஒரு மாதமாகச் சிக்கியுள்ள பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆசீர்வதித்து அனுப்பியுள்ள செபமாலைகளை அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் அந்நாட்டுக் கர்தினால் ப்ரான்சிஸ்கோ ஹாவியெர் எராசரிஸ்.

இவ்வியாழனன்று இவர்களின் குடும்பத்தினருக்குத் திருப்பலி நிகழ்த்தி திருத்தந்தை கொடுத்தனுப்பிய செபமாலைகளை வழங்கினார் சந்தியாகோ பேராயர் கர்தினால் எராசரிஸ்

சிலே நாட்டு சான் ஹோசே சுரங்கம் இடிந்ததையொட்டி பூமிக்கு அடியில் 2300 அடி ஆழத்தில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியிலிருந்து 33 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இந்த விபத்து நிகழ்ந்து இஞ்ஞாயிறுடன் ஒருமாதம் நிறைவடைகின்றது. இவர்களை மீட்டெடுக்க இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகலாம் என்று மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

இவர்களை மூடியுள்ள பாறையில் இதுவரை 135 அடிவரைதான் துளைகள் போட முடிந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பூமிக்கடியில் சிக்கியுள்ள இவர்களின் குடும்பத்தினர் பேசிய ஒலி-ஒளிக் காட்சிகள் அவர்களுக்கு அனுப்பப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.