2010-09-04 14:40:05

2015-ல் இணையதளம் பயன்பாடு 237 மில்லியன்


செப்.04,2010: இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அடுத்த ஐந்தாண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பாஸ்டன் ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

இந்திய மக்கள்தொகையில் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே சொந்தமாகக் கனணி வைத்திருந்தாலும் வலைத்தளத்தில் நேரம் செலவிடுவோரின் எண்ணிக்கையை நோக்கும் பொழுது இவ்வெண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் பாஸ்டன் குழு கூறியது.

இந்தியாவில் வலைதளத்தைப் பார்ப்பவர்களில் சுமார் 73 விழுக்காட்டினர் வேலைகள் தேடுவதில் அதிக நேரம் செலவழிக்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

2015ஆம் ஆண்டில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 23 கோடியே 70 இலட்சமாக அதிகரிக்கும் என அந்நிறுவனம் தனது ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த “பாஸ்டன் கன்சல்ட்டிங் குரூப்” எனும் நிறுவனம் உலகம் முழுவதும் இணைய தளம் பயன்படுத்தும் நாடுகள் குறித்த ஆராய்ச்சியை வெளியிட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.