2010-09-03 16:21:35

திருத்தந்தையின் பிரிட்டனுக்கானத் திருப்பணம் ஆங்லிக்கன் கிறிஸ்தவரை அறுவடை செய்யும் நோக்கம் கொண்டதல்ல - பிரிட்டன் தலத்திருச்சபை


செப்.03,2010. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் பிரிட்டனுக்கானத் திருப்பயணம் ஆங்லிக்கன் கிறிஸ்தவரைக் கத்தோலிக்கத்திற்குக் கவர்ந்திழுக்கும் நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டிற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது பிரிட்டன் தலத்திருச்சபை.

இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாண்டிற்கானத் திருத்தந்தையின் நான்கு நாள் திருப்பயணம் இடம் பெறவிருப்பதற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் சூழலில் பிரிட்டன் கத்தோலிக்கரின் தலைவரான பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் இவ்வாறு பேட்டியளித்துள்ளார்.

இம்மாதம் 16 முதல் 19 வரை இடம் பெறும் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் பிரிட்டனுக்கானத் திருப்பயணம், 1982ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பிரிட்டனுக்கு மேற்கொண்ட திருப்பயணத்திற்குப் பின்னர் இடம் பெறும் முதல் அதிகாரப்பூர்வத் திருப்பயணமாகும்.

ஆங்லிக்கன் திருச்சபையில் பெண்களைக் குருக்களாகத் திருநிலைப்படுத்துவது, ஒரேபாலினச் சேர்க்கை ஆயர்கள் இருப்பது போன்ற சில விவகாரங்களினால் கசந்து போயிருக்கும் அச்சபையினர் கத்தோலிக்கத்துக்கு வருவதற்கான வாய்ப்புக்களைத் திருத்தந்தை வழங்கியதைத் தொடர்ந்து இவ்விரு திருச்சபைகளுக்கும் இடையேயான உறவுகள் சுமுகமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் சுமார் 52 இலட்சம் க்த்தோலிக்கர் உள்ளனர்







All the contents on this site are copyrighted ©.