2010-09-02 15:49:40

மெக்ஸிகோ நாட்டின் 200வது விடுதலை நாள் கொண்டாட்டங்களில் அந்நாட்டின் ஆயர்கள் கலந்து கொள்கின்றனர்


செப்.02,2010. மெக்ஸிகோ நாடு விடுதலை அடைந்து 200 ஆண்டுகள் நிறைவுறுவதை இம்மாதம் அந்நாடு கொண்டாடும் வேளையில், அந்நாட்டின் ஆயர்களும் அக்கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

வருகிற செப்டம்பர் 16 மெக்ஸிகோவின் விடுதலை நாள் கொண்டாடப்படுவதையொட்டி, அந்நாட்டின் ஆயர்கள் இத்திங்களன்று வெளியிட்ட ஒரு மேய்ப்புப்பணி மடலில், தங்கள் நாட்டின் வரலாற்றை விசுவாசக் கண்ணோட்டத்துடன் மக்கள் காண வேண்டுமென்ற சிறப்பு அழைப்பினை விடுத்துள்ளனர்.

Guadalupeயில் அன்னை மரியா தோன்றியதைச் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், அந்த அன்னையின் பரிந்துரையால், தங்கள் நாடு ஒப்புரவிலும் ஒற்றுமையிலும் வளர்ந்துள்ளதையும், மெக்சிகோ நாட்டின் வரலாற்றில் இறைவனின் வழி நடத்தல் இதுவரை இருந்துள்ளதையும் எடுத்துக் கூறியுள்ளனர்.

தங்கள் நாடு சந்திக்கும் மூன்று முக்கிய சவால்களான வறுமை ஒழிப்பு, உயர்ந்த, தரமான கல்வி வழங்குதல், மக்களை இன்னும் அதிகமாய் ஒப்புரவிலும், ஒற்றுமையிலும் வளர்த்தல் ஆகியவைகளை ஆயர்களின் இந்த மடல் விவரிக்கின்றது.

72 பக்கங்கள் கொண்ட இந்த மேய்ப்புப்பணி மடல் வெளியிடப்பட்ட நிகழ்வில் அந்நாட்டு அரசுத் தலைவரின் மனைவி மார்கரீட்டா சவாலா (Zavala), மெக்ஸிகோ ஆயர் பேரவைத்தலைவர் பேராயர் Carlos Aguiar Retes, இன்னும் பிற அரசு அதிகாரிகள் மற்றும் ஆயர்கள் கலந்து கொண்டனர்







All the contents on this site are copyrighted ©.