2010-09-02 15:51:05

திருச்சபையில் பேராற்றல்மிக்கக் கருவியாகக் காணப்படும் பொதுநிலையினர் தட்டி எழுப்பப்பட வேண்டும் - பேரருட்திரு கிளமென்ஸ்.


செப்.02,2010. குருக்களின் அமைப்புமுறைகளுக்குள் பல பணிகளால் முடங்கிப் போயுள்ள ஆசியப் பொதுநிலை கத்தோலிக்கர், அவர்களுக்கானச் சிறப்புப் பணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான காலம் கனிந்துள்ளது என்று சோல் மாநாட்டில் கூறப்பட்டது.

அரசியல், ஊடகம், பணியிடம், குடும்ப வாழ்வு என எல்லா நிலைகளிலும் பொது நிலையினரின் பணியை வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் திருச்சபை இருக்கின்றது என்று சோல் மாநாட்டில் மேலும் கூறப்பட்டது.

இந்த மாநாட்டில் முதல் இரண்டு நாட்கள் இடம் பெற்ற விவாதங்கள் மற்றும் கருத்துப் பகிர்வுகள் குறித்துப் பேசிய பேரருட்திரு யோசேப் கிளமென்ஸ், 22 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட “Christifideles” என்ற பொதுநிலையினர் குறித்த அப்போஸ்தலிக்க ஏட்டின் பரிந்துரைகள் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

தற்சமயம் பொதுநிலையினர் திருச்சபையில் தூங்கும் பேராற்றல்மிக்க இராட்சதக் கருவியாக இருக்கிறார்கள், அவர்கள் தட்டி எழுப்பப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கர்தினால் யோசேப் ராட்சிங்கர் திருத்தந்தை 16ம் பெனடிக்டாகத் தேர்ந்தெடுக்கப்படும்வரை அவரது செயலராகப் பணியாற்றிய பேரருட்திரு கிளமென்ஸ், பொதுநிலையினர் குறித்தத் திருத்தந்தையின் அக்கறையையும் எடுத்துரைத்தார்.

தென் கொரியாவின் சோலில் நடைபெற்று வரும் ஆசியப் பொதுநிலைக் கத்தோலிக்கர் மாநாடு வருகிற ஞாயிறன்று நிறைவுபெறும்








All the contents on this site are copyrighted ©.