2010-09-02 15:35:24

செப்டம்பர் 03 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


301 - உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரினோ புனித மரினுசால் உருவாக்கப்பட்டது.

590 – புனித பெரிய கிரகரி திருத்தந்தையாகத் திருநிலைபடுத்தப்பட்டார்.

1783 – அமெரிக்கப் புரட்சிப் போர் முடிவுற்றதும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க ஐக்கிய நாடு பிரித்தானியாவிடமிருந்து அதிகாரபூர்வமாக விடுதலை அடைந்தது.

1801 - இலங்கையில் நெல், மற்றும் தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

1933 - சோவியத் ஒன்றியத்தின் அதிஉயர் புள்ளியான 7,495 மீட்டர் உயரமான கம்யூனிச முனையை Yevgeniy Abalakov அடைந்தார்.

1971 - கத்தார் பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றது.

1976 – நாசாவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கி செவ்வாயின் வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.







All the contents on this site are copyrighted ©.