2010-09-01 16:12:38

குரானை எரிக்கப் போவதாக தெரிவித்துள்ள ஒரு கிறிஸ்தவக் குழுவின் திட்டம் கண்டனத்திற்குரியது - இந்தியக் கர்தினால் Oswald Gracias


செப்.01, 2010 நியூயார்க் வர்த்தகக் கோபுரங்கள் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்கப்பட்டதன் ஆண்டு நினைவை அனுசரிக்கும் போது, குரானை எரிக்கப் போவதாக தெரிவித்துள்ள ஒரு கிறிஸ்தவக் குழுவின் திட்டம் கண்டனத்திற்குரியதென இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Oswald Gracias இப்புதனன்று கூறியுள்ளார்.

இது போன்ற ஒரு அறிவிப்பு திருக்குரானை அவமதிக்கும் ஒரு செயல் என்றும், மக்களின் உணர்வுகளை மதிக்காமல் சொல்லப்பட்டுள்ளதென்றும் கர்தினால் தன் கருத்தைக் கூறியுள்ளார்.

இந்தத் திட்டத்தை ஊடகங்கள் வழியே கேள்விப்பட்டதும் தான் மிகுந்த கவலை கொண்டதாகவும், இந்த முயற்சியை ஒரு கிறிஸ்தவக் குழு அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறதென்றும் கர்தினால் Gracias கூறினார்.

இதுபோன்ற முயற்சிகளில் மும்பையிலுள்ள கிறிஸ்தவர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும், மதக் கலவரங்களால் பிளவுபட்டுள்ள உலகில் கிறிஸ்தவர்கள் ஒற்றுமையை வளர்க்கவே அதிகம் பாடுபட்டு வருகின்றனர் என்றும் கர்தினால் Gracias மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.