2010-08-31 15:56:32

பங்களாதேஷில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன


ஆக.31,2010. பங்களாதேஷில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை விகிதம் உலகிலே அதிகமானதாக இருக்கின்றது மற்றும் அவ்வன்முறை அதிகரித்தவண்ணம் இருக்கின்றது என்று அந்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பங்களாதேஷில் குடும்பத் தகராறுகள், வரதட்சணை அமைப்புமுறை மற்றும் ஈவ்டீசிங் நடவடிக்கைகளால் அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தலத்திருசச்பையை மையமாகக் கொண்ட பங்களாதேஷ் மனித உரிமைகள் நிறுவனம் கூறியது.

பங்களாதேஷில் வீடுகளில் அல்லது வேலை செய்யும் இடங்களில் நூறு பெண்களுக்கு பதினேழு பேர் வீதம் ஒவ்வொரு நாளும் வன்முறைக்குப் பலியாகின்றனர் என்றும் இவர்களில் 25 விழுக்காட்டினர் இறக்கின்றனர் என்றும் அந்நிறுவனத்தின் ரோசலின் கோஸ்ட்டா தெரிவித்தார்.

பங்களாதேஷின் ஆறு மறைமாவட்டங்களும் இத்தகைய வன்முறைகளைத் தடுப்பதற்குப் பல முயற்சிகளை எடுப்பதாக கோஸ்ட்டா கூறினார்.

பங்களாதேஷில் ஆகஸ்ட் 24ம் தேதியன்று “பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு தேசிய தினம்,” அல்லது “Yeasmin நாள்,” என்று கடைபிடிக்கப்படுகிறது.

Yeasmin என்ற 14 வயதுச் சிறுமி மூன்று காவல்துறையினரால் 1996ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதன் நினைவாக இந்நாள் அனுசரிக்கபப்டுகின்றது








All the contents on this site are copyrighted ©.