2010-08-31 15:50:37

சிறாரும் முதியவரும் இல்லாத ஒரு கலாச்சாரம் இயங்குவது கடினம் - இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர்


ஆக.31,2010. சிறாரும் முதியவரும் இல்லாத ஒரு கலாச்சாரம் முழுமை பெற்றதாக இருக்காது மற்றும் அது இயங்குவது இயலாத காரியமாகும் என்று இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் எச்சரித்தார்.

திருமணத்துக்குப் பிரமாணிக்கமாய் இருப்பதன் அழகு மற்றும் குடும்பம், வாழ்க்கையின் கருப்பை என்ற தலைப்பில் இஞ்ஞாயிறு மறையுரையாற்றிய ஜெனோவா பேராயர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ, இத்தாலியின் மிகக் குறைவானப் பிறப்பு விகிதம் பற்றிப் பேசினார்.

இத்தாலியில் குழந்தை பிறப்பு விகிதம் 0.047 விழுக்காடு என்ற விகிதத்தில் இருக்கின்றவேளை, சாதாரணமாக, குழந்தை பிறப்பு விகிதச் சமன்பாடு ஒரு சமுதாயத்தின் உடல்ரீதியான வாழ்வுக்கு மட்டுமல்ல, தலைமுறைகளுக்கிடையே சமத்துவமற்ற நிலையையும் உருவாக்கும் என்றும் கர்தினால் பஞ்ஞாஸ்கோ தெரிவித்தார்.

குழந்தைகளின்றி ஒரு சமுதாயத்துக்கு எதிர்காலம் கிடையாது என்றும் கூறிய அவர், குழந்தைகளின்றி இருப்பது வெறுமையான எதிர்காலத்தை மட்டுமல்ல, சமுதாயத்தில் கல்வியறிவு மிகவும் குறைவாக இருப்பதையும் காட்டுகின்றது என்று எச்சரித்தார்.

குடும்பம், மனித சமுதாயம் மற்றும் விசுவாசத்தின் கல்விக்கூடம் என்றும் இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் பஞ்ஞாஸ்கோ கூறினார்.








All the contents on this site are copyrighted ©.