2010-08-30 14:41:26

இறைவன் மீதான அன்பு, மற்றும் மக்களுக்கான கருணையை அடிப்படையாகக்கொண்டது அன்னை தெரேசாவின் வாழ்வு.


ஆகஸ்ட் 30, 2010. இறைவன் மீதான அன்பு, நம்பிக்கை மற்றும் மக்களுக்கான கருணையை அடிப்படையாகக்கொண்ட அன்னை தெரேசாவின் வாழ்வு, உலக மக்கள் அனைவருக்கும் ஒரு தூண்டுதலாக உள்ளது என்றார் பெங்களூரு பேராயர் பெர்னார்டு மொராஸ்.

கன்னட மொழியில் அன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாறு அடங்கிய ஓர் ஒலி ஒளி குறுந்தகடையும், இதழையும் வெளியிட்டு அன்னைதெரேசாவின் நூறாம் ஆண்டு பிறப்பு விழாவை பெங்களூரில் சிறப்பித்த பேராயர், பிறரின் வாழ்வில் எத்தகைய நல்மாற்றங்களைக் கொணரமுடியும் என்பதை தன் வாழ்வில் நிகழ்த்திக் காண்பித்தவர் அன்னை என்பதை எடுத்துரைத்து விளக்கினார்.

இதே விழாவில் உரையாற்றிய பெங்களூரு தகவல் தொழில் நுட்ப அமைப்பான Mind Tree ன் நிறுவனர் Subroto Bagchi, இந்தியாவின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டிய இரு தரஅடையாளங்கள் மகாத்மா காந்தியும் அன்னை தெரேசாவும் என்றார். தகவல் தொழில் நுட்ப மொழியில் பேசவேண்டுமென்றால் அன்னை தெரேசாவை ஆன்மாக்களின் உயர் நிர்வாகி எனக் கூறலாம் என்றார்.

உலகப் பிரச்னைகளுக்கு பணத்தைக் கொண்டு தீர்வு காணமுடியாது என்ற Bagchi, அன்னை தெரேசாவால் தன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தன் அனுபவங்கள் குறித்து எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.