2010-08-28 15:52:09

நூற்றுக்கணக்கான இந்தோனேசியக் குடியேற்றதாரக் கைதிகள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்


ஆக.28,2010. மலேசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள நூற்றுக்கணக்கான இந்தோனேசியக் குடியேற்றதாரக் கைதிகள் குறித்து இந்தோனேசிய அரசு அக்கறையின்றி இருக்கின்றது என்று இந்தோனேசியத் தலத்திருச்சபையும் அரசு சாரா அமைப்புகளும் அரசைக் குறை கூறியுள்ளன.

மலேசியாவில் கொலை, போதைப்பொருள் வியாபாரம் போன்ற குற்றங்கள் தொடர்பாக 345 இந்தோனேசிய குடியேற்றதாரக் கைதிகள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர் என்று இந்தோனேசிய வளர்ச்சி மற்றும் குடியேற்றதாரர் மீதான அக்கறை குறித்த பன்னாட்டு அரசுசாரா அமைப்பு அறிவித்துள்ளது.

இவ்விவகாரம் குறித்துப் பேசிய இந்தோனேசிய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவில் பணிபுரியும் அருள்திரு Serafin Danny Sanusi, அந்நாட்டு அரசு இவ்வெண்ணிக்கையை 177 என்று குறைத்துக் கூறுகிறது என்றும், தனது குடிமக்களைப் பாதுகாப்பதற்கு அரசு விருப்பமின்றி இருப்பதையே இது காட்டுகின்றது என்றும் கூறினார்.

இந்தோனேசியர்கள் பிற நாடுகளிலும் இதே மாதிரியான தண்டனைகளை எதிர்கொள்வதாக அருள்திரு Sanusi மேலும் கூறினார்.

இந்தோனேசியாவின் தேசிய வருவாய்க்கு ஆண்டுக்கு 600 கோடி ரூபாய்களை வழங்கும் வெளிநாடுகளில் வேலை செய்யும் அந்நாட்டுப் பணியாளர்கள் அரசால் பாராட்டப்படுவதில்லை என்ற கவலையையும் அக்குரு தெரிவித்தார்







All the contents on this site are copyrighted ©.