2010-08-27 15:12:11

பிலிப்பைன்ஸில் இலவசமாக விவிலியங்களை வழங்குவதற்கு பதிப்புரிமைச் சட்டம் தடங்கலாக இருக்கின்றது


ஆக.27,2010. பிலிப்பைன்ஸில் இறைவார்த்தையை அறிவிப்பதற்கான ஆயர்களின் திட்டத்திற்குப் புத்தகப் பதிப்புரிமை சட்டம் அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.

கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட, “அவர்கள் ஒன்றாய் இருப்பார்களாக” என்ற பிலிப்பைன்ஸ் ஆயர்களின் நடவடிக்கையின்படி 2013ம் ஆண்டுக்குள் ஐம்பது இலட்சம் New American விவிலியப் பிரதிகளை இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின் விவிலியப் பணிக்குழுவும் பிலிப்பைன்ஸ் விவிலியக் கழகமும் 2008ம் ஆண்டில் நடத்திய ஆய்வில், அந்நாட்டில் அறுபது விழுக்காட்டுக் குடும்பங்களுக்குச் சொந்தமாக விவிலியங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் விவிலியங்களை இலவசமாக வழங்குவதற்கு ஆயர்கள் திட்டமிட்டனர்.

எனினும், தற்சமயம் பதிப்புரிமைச் சட்டம் தடங்கலாக இருக்கின்றது என்பதால் இது குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைக்கு விண்ணப்பிக்க இருப்பதாக பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின் விவிலியப் பணிக்குழுத் தலைவரான ஆயர் Pablo David தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.