2010-08-27 15:11:22

தொழிலாளர் குறித்த சமய நிறுவனங்களின் நடவடிக்கைக்கு அமெரிக்க ஆயர்கள் ஆதரவு


ஆக.27,2010. மதங்களின் அடிப்படையில் ஆட்களை வேலைக்கு அமர்த்துவதற்கு சமய நிறுவனங்களுக்கு இருக்கும் உரிமைக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதற்கான நடவடிக்கைக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் கத்தோலிக்கர் உட்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் கையெழுத்திட்ட திறந்த கடிதம், அந்நாட்டின் எல்லா காங்கிரஸ் அவை உறுப்பினர்களுக்கும் இவ்வாரத்தில் அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் ஜான்சன் பதவிக்காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட 1964ம் ஆண்டின் குடியுரிமை விதிமுறையைக் கோடிட்டுக் காட்டியுள்ள அக்கடிதம், 2007ம் ஆண்டில் அரசுத்தலைவர் பில் கிளின்டன் கையெழுத்திட்ட சமய சுதந்திரப் பாதுகாப்பு சட்டத்தையும் மேற்கோள் காட்டியுள்ளது.

மதங்களின் அடிப்படையில் ஆட்களை வேலைக்கு அமர்த்துவதற்கு சமய நிறுவனங்களுக்கு இருக்கும் உரிமையைப் பறிப்பது சமய சுதந்திரத்தை மீறுவதாக இருக்கின்றது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை சார்பில் கையெழுத்திட்ட அந்தோணி பிக்கரெல்லோ கூறினார்.








All the contents on this site are copyrighted ©.