2010-08-27 15:17:20

சர்வதேச உதவிகள் இலங்கைக்குத் தேவை - ஐ நா


ஆக.27,2010. இலங்கையில் சர்வதேச நிறுவனங்கள் தொடர்ந்து தங்கியிருந்து பணியாற்ற வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது என்று இலங்கைக்கான ஐ நா வின் சிறப்புப் பிரதிநிதி நீல் பூனே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம் பெயர்ந்த மக்களுக்கான உதவிகளையும், மீண்டும் தமது பகுதிக்கு திரும்பியுள்ளவர்களுக்கான அவசரத் தேவைகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பதால் சர்வதேச அமைப்புகளின் உதவி இலங்கைக்கு இன்றியமையாததாகவே இருக்கின்றது எனவும் அவர் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பணிகள் முடிவடைந்துவிடவில்லை என்பதையும் தெளிவாக தனது அறிக்கையில் நீல் பூனே சுட்டிக்காட்டியுள்ளார்.

2009 ஆம் ஆண்டின் பிற்பகுதி தொடங்கி இதுவரை இரண்டு இலட்சம் மக்கள் வடகிழக்கில் மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளனர் எனவும், அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது எனவும் நீல் பூனே கூறியுள்ளார்.

எனினும், இன்னமும் 70,000 மக்கள் இடம் பெயர்ந்த நிலையிலேயோ அல்லது தமது இருப்பிடங்களுக்கு அருகில் வேறு ஒரு இடைத்தங்கல் முகாமிலேயோ இருப்பதாக தாங்கள் கணக்கீடு செய்துள்ளதாகவும் ஐ நா வின் பிரதிநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்







All the contents on this site are copyrighted ©.