2010-08-26 16:10:11

ஆகஸ்ட் 27 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1828 - பிரேசிலுக்கும் அர்ஜெண்டீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உருகுவாய் தனிநாடாக அறிவிக்கப்பட்டது.

1859 - பென்சில்வேனியாவின் "டிட்டுஸ்வில்" என்ற இடத்தில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகில் வெற்றிகரமாகத் தோண்டப்பட்ட முதலாவது எண்ணெய்க் கிணறு ஆகும்.

1883 – இந்தோனேசியாவில் கிரகட்டோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டனர்.

1896 - பிரிட்டனுக்கும் சான்சிபாருக்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் அதாவது 9 மணி, 2 நிமிடத்துக்குத் தொடங்கி 9 மணி 40 நமிடங்களுக்கு முடிந்த போராகும்.

1962 - நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனஸ் நோக்கி செலுத்தியது.

1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து மால்டோவா பிரிந்தது.








All the contents on this site are copyrighted ©.