2010-08-25 17:29:25

காங்கோ புரட்சியாளர்களின் கற்பழிப்புச் செயல்களுக்கு ஐ.நா.கண்டனம்


ஆக.25,2010. காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் புரட்சியாளர்கள் 150க்கும் மேற்பட்ட அப்பாவி குடிமக்களைத் தாக்கி பாலியல் வன்செயலை நடத்தியிருப்பதை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் நிறுவனம் தனது மூத்த அலுவலக உறுப்பினர்களை அந்நாட்டிற்கு அனுப்புவதாக அறிவித்துள்ளது
ஐ.நா.பொதுச் செயலரும், மோதல்களில் பாலியல் வன்முறைக்கான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதியும் இந்த வன்செயலை வன்மையாய்க் கண்டித்துள்ளனர். அத்துடன் பாலின அடிப்படையில் வன்செயல் செய்யும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு அரசு அதிகாரிகளுக்கு ஐ.நா. உதவவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.காங்கோ ஜனநாயகக் குடியரசின் பானாமுக்கிராப் பகுதியில் கடந்த ஜூலை 30க்கும் இம்மாதம் 2க்கும் இடைப்பட்ட நாட்களில் குறைந்தது 154 அப்பாவி பொதுமக்கள் 13 கிராமங்களில் பாலியல் வன்செயலுக்கு ஆளாகியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.