2010-08-25 17:29:53

இதய நோயினால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியர்களே: ஆய்வு


ஆக.25,2010. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் மக்களை விட இந்தியர்கள் தான் அதிக அளவில் இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுவதாக அண்மை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு கலிபோர்னியா மாநிலத்தில் இதய நோய் ஆராய்ச்சி மையம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆசிய அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவின் பெரும்பாலான மருத்துவமனைகளில் இதயம் தொடர்பாகவே சிகிச்சைக்கு வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள அமெரிக்க வாழ் இந்தியர்களில் 25 விழுக்காட்டினர் இதயம் சம்பந்தமான நோய்களால் துன்புறுகின்றனர் என்றும் சிலர் பரம்பரையாகவே அந்நோய் உள்ளவர்கள் என்றும், சிலருக்கு இளவயதிலேயே அதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன என்றும் அந்த ஆராய்ச்சியில் மேலும் தெரியவந்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.