2010-08-25 17:28:53

அரசு இன்றியுள்ள நேபாளம் நிதியுதவியின்றி கஷ்டப்படும், பொருளாதார நிபுணர் கருத்து


ஆக.25,2010. நேபாளத்தில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கு ஐந்தாவது தடவையாக இத்திங்களன்று கூடிய நாடாளுமன்றம் இம்முறையும் தோல்வியைத் தழுவியது. அடுத்தத் தேர்தல் வருகிற செப்டம்பர் 5ம் தேதி என்று குறிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த ஜூன் 30ம் தேதி பிரதமர் மாதவ் குமார் பதவி விலகியதையடுத்து அந்நாடு அரசு இன்றி உள்ளது.
இதுவரை புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பதால் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வளர்ச்சித்திட்டங்களை நடத்துவதற்கான ஐ.நா.வின் நிதி உதவி தடை படும் என்று அஞ்சப்படுகிறது. நாட்டின் அரசியல் இன்னும் ஒரு மாதத்திற்கு மேலாக இந்நிலையை எதிர்நோக்கினால் இந்த நிதி ஆண்டுக்கான எல்லாத் திட்டங்களும் தோல்வியில் சென்று முடியும் என்று பொருளாதார நிபுணர் Bishwambhar Pyakurel கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.