2010-08-23 14:47:50

ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த கண்காட்சி ஒன்று புது டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது.


ஆகஸ்ட் 23, 2010. ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்று ஈராண்டுகள் கடந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்டோரின் துன்பங்கள் இன்னும் தொடர்வது குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் கண்காட்சி ஒன்றை புது டெல்லியில் திறந்துள்ளனர் சமூக நல ஆர்வலர்கள் சிலர்.

இந்த பொருட்காட்சியை ஞாயிறன்றுத் திறந்து வைத்து உரையாற்றிய மும்பையின் திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், குடியரசு மற்றும் மதச்சார்பற்றக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் இந்தியாவிற்கு, கந்தமாலில் இடம்பெற்ற தீவிரவாத வன்முறைகள் பேரிழுக்கு என்றார்.

2004ம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் ஒரிசாவின் கந்தமாலில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளில் சேதமாக்கப்பட்டப் பொருட்களையும் அது குறித்த ஓவியங்களையும், மூங்கிலால் செய்யப்பட்ட சில குடிசைகளில் மக்களின் பார்வைக்கென வைத்துள்ளனர் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தோர்.

வன்முறையின்போது பாதி எரிந்த சிலுவை, விவிலியம், ஏனைய வீட்டுப்பொருட்கள் என பல பொருட்கள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.