2010-08-20 15:42:34

புற்று நோய் ஆராய்ச்சிக்கு உதவும், டெர்ரி பாக்ஸ் மாரத்தான்


ஆக.20,2010. புற்றுநோய் ஆராய்ச்சிக்கு நிதி திரட்டும் வகையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற டெர்ரி பாக்ஸ் மாரத்தான் ஓட்டம், சென்னையில் வருகிற ஞாயிறன்று நடைபெறும்.

கனடா நாட்டைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீரரான டெர்ரி பாக்ஸ், எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஒற்றைக் காலை இழந்தார். இதையடுத்து, அவருக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டது. ஓட்டப் பந்தய வீரராக இருந்த தனது வாழ்வை முடக்கிய புற்று நோயால், மற்றவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க பாடுபட டெர்ரி பாக்ஸ் முடிவு செய்தார். இதற்கு உதவும் வகையில், புற்று நோய் ஆராய்ச்சிக்கு நிதி திரட்டும் பணியில் இறங்கினார். வேறு வழியை அறியாத அவர், தனக்கு தெரிந்த ஓட்டத்தையே இதற்கும் பயன்படுத்த முடிவெடுத்தார்.

அதன்படி, செயற்கை காலுடன் கனடாவில் பசிபிக் முதல், அட்லாண்டிக் கடற்கரை வரை 5,300 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடி, புற்று நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும், நிதி திரட்டவும் திட்டமிட்டார். இதற்கு, "நம்பிக்கை மாரத்தான்' என அவர் பெயரிட்டார்.








All the contents on this site are copyrighted ©.