2010-08-20 15:42:54

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செயோல் உயர்மறைமாவட்டம் உதவி


ஆக.20,2010. பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால உதவியாக முப்பதாயிரம் டாலரை அனுப்பவிருப்பதாக தென் கொரிய உயர்மறைமாவட்டம் ஒன்று அறிவித்துள்ளது.

செயோல் உயர்மறைமாவட்டத்தின் வெளிநாடுகளுக்கான உதவிப் பணிக்குழுவான ஒரே உடல் ஒரே ஆவி என்ற இயக்கம், சர்வதேச காரித்தாஸ் நிறுவனத்தின் மூலம் இவ்வுதவியைச் செய்யவிருக்கின்றது.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானைப் பார்வையிட்டுள்ள ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், தற்போது அந்நாட்டில் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் முதல் இரண்டு கோடிப் பேருக்கு உணவும் குடியிருப்பும் அவசரச் சிகிச்சைகளும் தேவைப்படுகின்றன என்று கூறினார்.

இந்நாட்டிற்கு உலகளாவிய உதவிகள் வழங்கப்படுமாறு ஐ.நா.வின் 192 உறுப்பு நாடுகளுக்கு அழைப்புவிடுத்த மூன், பாகிஸ்தான் குறித்த உயர்மட்ட அளவிலான அமைச்சர்கள் கூட்டம் வருகிற செப்டம்பர் 19ம் தேதி இடம் பெறும் என்றும் அறிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.