2010-08-20 15:43:27

கென்யத் திருச்சபை தனது நம்பகத்தன்மையை இழந்துவிடவில்லை- ஆயர்கள்


ஆக.20,2010. கென்யாவின் புதிய அரசியல் அமைப்பிற்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்று விசுவாசிகளைத் தூண்டியதன் மூலம் திருச்சபை தனது நம்பகத்தன்மையை இழந்துவிடவில்லை என்று கென்ய கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

இம்மாதம் 4ம் தேதி நடைபெற்ற புதிய அரசியல் அமைப்பு குறித்த பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பில் கிறிஸ்தவர்கள் அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்று ஆயர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆயினும் அவ்வாக்கெடுப்பின் மூலம் புதிய அரசியல் அமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து கருத்து தெரிவித்த ஆயர்கள் இவ்வாறு கூறினர்.

கடவுளின் மனிதர்கள் என்ற முறையில் புதிய அரசியல் அமைப்பு குறித்த உண்மையை எடுத்துக் கூறினோம் என்றுரைக்கும் ஆயர்களின் அறிக்கை, இதற்கு எதிராக வாக்களித்த நல்லமனம் கொண்ட கென்யர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.