2010-08-19 15:02:05

மேலைநாடுகளின் வாழ்க்கை முறையும், கலாச்சாரமும், உணவுப் பழக்கங்களும் வளர்ந்து வரும் நாடுகளை அதிகம் பாதித்து வருகின்றன


ஆகஸ்ட் 19, 2010. வளர்ந்து வரும் நாடுகளில், மேலைநாடுகளின் வாழ்க்கை முறையும், கலாச்சாரமும் அதிகம் பரவி வரும் சூழலில், மேலை நாடுகளின் உணவுப் பழக்கங்களும் வளரும் நாடுகளை அதிகம் பாதித்து வருகின்றன.
மனித உடலுக்குத் தேவையான சக்தியையும், மூலப் பொருட்களையும் இயற்கையிலிருந்து கிடைக்கும் காய்கள், பழ வகைகள் இவற்றின் வழியாகப் பெற்று வந்த நாம், இப்போது அந்த சக்திகளை மாத்திரைகள் மூலம் பெறும் பழக்கம் வளர்ந்து வருகிறது.செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழவகைகள், காய்கள் இவற்றை உண்பதால், குழந்தைகள் பல வகை பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர் என்றும், பொதுவாக, இன்றைய காலத்தில் நாம் அடிக்கடி உட்கொள்ளும் துரித உணவுப் பழக்கங்களால் பல வகையில் இயற்கை சக்திகளை இழந்து, அவைகளை ஈடு செய்ய மேலும் செயற்கைப் பொருட்களைத் தேட வேண்டியுள்ளது என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.