2010-08-19 15:01:51

போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகளின் இறுதிப் பிரிவு ஈராக்கை விட்டு வெளியேறியுள்ளது


ஆகஸ்ட் 19, 2010. கடந்த ஏழு ஆண்டுகளாக ஈராக் நாட்டில் போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகளின் இறுதிப் பிரிவு இவ்வியாழன் அதிகாலையில் ஈராக்கை விட்டு வெளியேறியது.
இன்னும் 50,000 இராணுவப் படை வீரர்கள் அந்நாட்டில் 2011ம் ஆண்டு இறுதி வரை இருப்பார்கள் என்றும், அவர்கள் அந்நாட்டின் இராணுவத்திற்குப் பயிற்சிகள் அளிப்பதில் ஈடுபட்டிருப்பர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா பதவி ஏற்றபின், அமெரிக்கப் படைகளை ஈராக்கை விட்டு மீண்டும் தங்கள் நாட்டுக்கு 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 31க்குள் கொண்டுவருவதாக வாக்களித்திருந்தார். அந்த நாளைக்கு முன்னரே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.2003ம் ஆண்டிலிருந்து ஈராக்கில் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகள் மேற்கொண்ட இந்தப் போரினால் அந்நாட்டைச் சேர்ந்த 4,415 வீரர்கள் உயிரிழந்தனர் என்பதும், இப்போருக்கு அமெரிக்க ஐக்கிய நாடு (900 Billion Dollars) 90,000 கோடி டாலர்கள் செலவு செய்துள்ளதென்பதும் நினைவில் கொள்ள வேண்டியவை.







All the contents on this site are copyrighted ©.