2010-08-18 15:49:06

தென் கொரியாவில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் - தென் கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் முயற்சி


ஆக.18,2010 தென் கொரியாவில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென்று தென் கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் ஒற்றுமை பணிக்குழு முயற்சிகளில் இறங்கியுள்ளது.
தென் கொரியாவில் 2007ம் ஆண்டு முதல் மரண தண்டனை எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனினும், மரண தண்டனைச் சட்டம் இன்னும் அரசின் ஒரு பகுதியாக இருப்பதால், அதையும் நீக்க இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதென இப்பணிக்குழு கூறியுள்ளது.
மரண தண்டனையை ஒழிக்க வேண்டுமென வருகிற செப்டம்பர் 2ம் தேதி மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துவரும் இப்பணிக் குழுவினர், இந்த நிகழ்ச்சியில் தென் கொரியாவின் புகழ் பெற்ற கலைஞர்கள் பலர் பங்கு பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.குற்றம் செய்பவர்களை அரசு தண்டிப்பது ஏற்றுக் கொள்ளகூடியதென்றாலும், மனித உயிரைப் பறிப்பது என்ற உரிமை யாருக்கும் இல்லை என்பதை வலியுறுத்தவே இந்த முயற்சிகள் என்று தென் கொரிய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிக்கான பணிக்குழுவின் தலைவர் ஆயர் Matthias Ri Iong-hoon செய்தியாளர்களிடம் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.