2010-08-18 15:50:51

இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் மூலம் HIV குறித்த விழிப்புணர்வு


ஆக.18,2010 இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் என்று முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டுப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை சிங்கப்பூரில் ஆரம்பமாயின.
பிற நிறுவனங்கள், அமைப்புக்களுடன் இந்த ஒலிம்பிக் போட்டிகளை முன்னின்று நடத்தும் ஐ.நா.அவை, இந்தப் போட்டிகள் மூலம் HIV குறித்த விழிப்புணர்வையும், இந்த நோயுள்ளவர்களுக்கு சமுதாயத்தில் கிடைக்க வேண்டிய முழுமையான ஏற்பையும் வலியுறுத்த இந்த விளையாட்டுப் போட்டிகள் உதவும் என்று அறிவித்துள்ளது.
உலக இளையோர் ஆண்டில், இளைய விளையாட்டு வீரர்கள் பலருக்கும் எடுத்துக்காட்டாக இருப்பதால், அவர்கள் வழியே இந்தச் செய்தியைப் பிறருக்கு எடுத்துக் கூற விழைகிறோம் என்று ஐ.நா. HIV/AIDS தடுப்புப் பிரிவின் முதன்மை இயக்குனர் Michel Sidibe கூறினார்.
ஆகஸ்ட் 14 முதல் 26 வரை சிங்கப்பூரில் நடைபெறும் இந்த இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள 205 நாடுகளிலிருந்து 5000க்கும் மேற்பட்ட இளையோர் கலந்து கொண்டுள்ளனர்.முதன் முறையாக நடத்தப்படும் இந்த இளையோர் ஒலிம்பிக் போட்டியில் 14 முதல் 18 வயதுக்குட்பட்ட இளையோர் கலந்து கொண்டு வருகின்றனர் என்றும், இந்தப் போட்டிகள் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடையிலும், குளிர்காலத்திலும் மாறி மாறி நடத்தப்படும் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.