2010-08-18 15:50:35

அமெரிக்காவில் அணு ஆயுதங்கள் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளைத் தடுத்த கத்தோலிக்கக் குழு கைது


ஆக.18,2010 அமெரிக்க ஐக்கிய நாட்டின் Kansas நகரத்தில் உருவாக இருக்கும் அணு ஆயுதங்கள் தயாரிப்புத் தொழிற்ச்சாலையின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாவதைத் தடுத்த கத்தோலிக்கக் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
Kansas நகரத்தில் அணு ஆயுத தயாரிப்புத் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளை இச்செவ்வாயன்று அமெரிக்க அரசு ஆரம்பித்த வேளையில், இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு கத்தோலிக்க சமூகநல ஆர்வலர்கள் சிலர் "நாம் எதற்கும் அஞ்சோம்." (We Shall Not Be Moved) என்ற பாடலைப் பாடி, அப்பகுதியில் சூரியகாந்தி மலர்களின் விதைகளைத் தூவ முற்பட்டபோது, காவல் துறை அவர்களைக் கைது செய்தது.
இப்பகுதியில் உள்ள சாகுபடி நிலங்களைத் தோண்டி எடுக்க வந்த பெரும் இயந்திரங்களைத் தடுக்கும் வண்ணம் கைகளைக் கோர்த்து நின்ற இந்தச் சமூகநல ஆர்வலர்கள், 20 இயந்திரங்களை இவ்வாறு நிறுத்தி, அந்தப் பணியை ஏறத்தாழ ஒரு மணி நேரம் நிறுத்தி வைத்தனர்.மக்களுக்கும், உலக அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் செயல் பாடுகள் எதுவாயினும், அவற்றிற்கு எதிராகத் தாங்கள் எல்லாவித முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று இந்தக் குழுவினர் கூறினர்.







All the contents on this site are copyrighted ©.