2010-08-17 16:25:43

தலத்திருச்சபையுடனான பேச்சுவார்த்தை மற்றும் பரிந்துரையின் மூலம் மேலும் ஆறு அரசியல் கைதிகளை விடுவிக்க உள்ளதாக அறிவித்துள்ளது கியூப அரசு.


ஆகஸ்ட் 17, 2010. தலத்திருச்சபையுடனான பேச்சுவார்த்தை மற்றும் பரிந்துரையின் மூலம் ஏற்கனவே சில அரசியல் கைதிகளை விடுவித்துள்ள கியூப அரசு தற்போது மேலும் ஆறு அரசியல் கைதிகளை விடுவிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே கியூப ஆயர்களின் தலையீட்டின் பேரில் 20 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விடுவிக்கப்பட உள்ள 6 பேரும் உடனடியாக இஸ்பெயின் நாட்டிற்கு அனுப்பப்படுவர் என்றார் ஹவானா பெருமறைமாவட்ட அதிகாரி ஒருவர்.

விடுவிக்கப்பட்டவுடன் இஸ்பெயினுக்கு வெளியேற்றப்பட விரும்பாத அரசியல் கைதிகளின் விடுதலையே காலதாமதமாகி வருவதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.