2010-08-17 16:26:34

கர்நாடகாவில் இரு கிறிஸ்தவ போதகர்களையும் 10 கிறிஸ்தவர்களையும் கைது செய்துள்ளது அம்மாநில காவல்துறை.


ஆகஸ்ட் 17, 2010. கர்நாடகாவின் ஞாயிறு கிறிஸ்தவ ஜெப வழிபாடு ஒன்றில் சில இந்து தீவிர வாதிகள் புகுந்து கலகம் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இரு கிறிஸ்தவ போதகர்களையும் 10 கிறிஸ்தவர்களையும் கைது செய்துள்ளது அம்மாநிலக் காவல்துறை.

சுதந்திரத் தினத்தன்று மாண்டியா மாவட்டத்தின் சிறு கோவில் ஒன்றில் ஜெப வழிபாடு நடந்துகொண்டிருந்தபோது உள்ளே புகுந்த ஏறத்தாழ 30 இந்து நடவடிக்கையாளர்கள் கூச்சலிட்டு குழப்பம் விளைவித்தனர்.

குழப்பத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதை விடுத்து, கிறிஸ்தவப் போதகர்களையும் 10 கிறிஸ்தவர்களையும் மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது காவல்துறை.

2008ம் ஆண்டு கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது வரை 200க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.