2010-08-17 16:26:54

உலக அளவில் ஆயுதங்களைக் குறைப்பதற்கானப் பிரச்சாரத்தில் நேபாள கத்தோலிக்க இளைஞர்களும் இணைந்துள்ளனர்.


ஆகஸ்ட் 17, 2010. ஆயுதங்களில் பணம் வீணடிக்கப்படுவதை குறைக்கவேண்டும் என்ற மதங்களிடையேயான உலகளாவிய பிரச்சாரத்தில் நேபாளத்தின் கத்தோலிக்க இளைஞர்களும் இணைந்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பணம் ஆயுதங்களில் வீணடிக்கப்படுவதைத் தடுக்க தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற உந்துதலுடன் நேபாள கத்தோலிக்க இளைஞர்கள், 'அமைதிக்காக சர்வதேச மதங்கள்' என்ற அமைப்பின் பிரச்சாரத்தில் இணைந்துள்ளதாக அறிவித்தார் கத்தோலிக்க இளைஞர் தலைவர் கிஷோர் ஷெரெஸ்தா.

உலகின் அனைத்து நாடுகளும் தங்கள் ஆயுதச் செலவை 10 விழுக்காடு குறைத்து அத்தொகையை வளர்ச்சித் திட்டங்களுக்கென வழங்கவேண்டும் என்ற உலகளாவிய விண்ணப்பத்தில் நேபாளத்தில் 10 இலட்சம் பேரின் கையெழுத்தைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.