2010-08-16 15:38:15

பிரான்ஸின் லூர்து அன்னை திருத்தலத்தில் வெடிகுண்டு புரளியால் சில மணி நேரம் வழிபாடுகள் பாதிப்பு.


ஆகஸ்ட் 16, 2010. பிரான்ஸின் லூர்து அன்னை திருத்தலத்தில் வெடிகுண்டு புரளி ஒன்று இடம்பெற்றதைத் தொடர்ந்து எறத்தாழ 30 அயிரம் விசுவாசிகள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு சோதனை இடம்பெற்றது.

லூர்து மரியன்னை திருத்தலத்தில் இஞ்ஞாயிறு சிறப்பிக்கப்பட்ட மரியன்னை விண்ணேற்பு திருவிழாவின்போது மாலை உள்ளூர் நேரம் மூன்று மணிக்கு 4 வெடிகுண்டுகள் வெடிக்க உள்ளதாக காவல்துறைக்கு அடையாளம் தெரியாத ஒருவர் தொலைபேசி வழி தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, மோப்ப நாய்களுடன் வந்த காவல்துறையினர் அங்கு குழுமியிருந்த ஏறத்தாழ 30 ஆயிரம் திருப்பயணிகளை அமைதியாக வெளியேற்றி, திருத்தலத்தில் சோதனைகளை முடித்தபின் அவர்களைத் திருத்தலத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.

1858ம் ஆண்டு பெர்னதெத் என்ற சிறுமிக்கு மரியன்னை காட்சி கொடுத்த இடத்தில் கட்டப்பட்டுள்ள திருத்தலத்தைத் தரிசிக்க ஒவ்வோர் ஆண்டும் 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட திருப்பயணிகள் வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.