2010-08-16 16:13:52

ஆகஸ்ட் 17 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1807 - இராபர்ட் ஃபுல்ட்டனின் முதலாவது அமெரிக்க நீராவிப்படகு நியூ யார்க்கிலிருந்து புறப்பட்டது. இதுவே உலகின் முதலாவது வர்த்தக நீராவிப்படகு ஆகும்.

1945 - இந்தோனேசியா விடுதலையை அறிவித்தது.

1947 - இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு Radcliffe Line வெளியிடப்பட்டது.

1960 - காபோன் பிரான்சிடமிருந்து விடுதலை அடைந்தது.

1962 - கிழக்கு ஜெர்மனியில் இருந்து பெர்லின் சுவரைக் கடந்து தப்பித்துச் செல்ல முயன்ற பீட்டர் ஃபெக்டர் (Peter Fechter) என்ற 18 வயது இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தச் சுவரைக் கடந்து செல்ல முயன்று இறந்த முதலாவது நபர் இவராவார்.

1970 - வெனேரா 7 விண்கலம் ஏவப்பட்டது. வேறொரு கோளில் இருந்து வெற்றிகரமாகத் தகவல்களை அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

1982 - ஜெர்மனியில் குறுந்தகடு (CD) முதன்முறையாகப் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.