2010-08-14 15:45:18

கத்தோலிக்கத் தனித்துவத்தைக் கட்டிக்காக்கும் கத்தோலிக்கப் பல்கலைகழகம் மட்டுமே தனது எதிர்காலத்தைக் கொண்டிருக்கும் - கத்தோலிக்கக் கல்விப் பேராயத் தலைவர்


ஆக.14,2010. கத்தோலிக்கத் தனித்துவத்தைக் கட்டிக்காக்கும் கத்தோலிக்கப் பல்கலைகழகம் மட்டுமே தனது எதிர்காலத்தைக் கொண்டிருக்கும் என்று கத்தோலிக்கக் கல்விப் பேராயத் தலைவர் கர்தினால் Zenon Grocholewski கூறினார்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் “Ex Corde Ecclesiae” என்ற அப்போஸ்தலிக்க ஏட்டை வெளியிட்டு இஞ்ஞாயிறோடு இருபது ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கத்தோலிக்க ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த போது இவ்வாறு தெரிவித்தார் கர்தினால் Grocholewski.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இந்த ஏட்டை வெளியிட்டதற்கான இரண்டு முக்கிய காரணங்களைக் குறிப்பிட்ட கர்தினால் Grocholewski, கத்தோலிக்கப் பல்கலைகழகங்களின் முக்கியத்துவத்தையும், அவற்றின் இயல்பையும் பணியையும் கோடிட்டுக் காட்டும் சட்டங்கள் உருவாக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தவும் இவ்வேடு வெளியிடப்பட்டது என்றார்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் காலத்தில் 250க்கும் மேற்பட்ட கத்தோலிக்கப் பல்கலைகழகங்கள் உருவாக்கப்பட்டன என்றும் பல பல்கலைகழகங்கள், இந்த அப்போஸ்தலிக்க ஏட்டை மையமாக வைத்துப் தங்களது தனித்துவத்தை வலுப்படுத்தியுள்ளன என்றும் கர்தினால் தனது பாராட்டைத் தெரிவித்தார்







All the contents on this site are copyrighted ©.