2010-08-13 16:09:02

முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் இளையோர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கென ஐக்கிய நாடுகள் நிறுவனம் உதவி


ஆக.13,2010: இந்தியா உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் இளையோர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கென ஐக்கிய நாடுகள் நிறுவனம் உதவிகளை வழங்க உறுதியளித்துள்ளது.

உலக இளையோர் தினமான ஆகஸ்ட் 12ம் தேதியான இவ்வியாழனன்று உலக இளையோர் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நாளில் 85 நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 1500 இளையோர் மேம்பாட்டுத் திட்டங்களில் 51 சிறந்த திட்டங்களைத் தேர்ந்தெடுத்து அவைகளுக்கு உதவி வழங்க ஐ.நா. தீர்மானித்தது.

ஐ.நா.வின் நகர்ப்புற இளையோர் நிதி விருதுகளின் அடிப்படையில் சிறந்த இளையோர்நலத் திட்டங்களுக்கு 5,000 முதல் 25 000 டாலர் வரை நிதி வழங்கப்படுகின்றது







All the contents on this site are copyrighted ©.